யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் (06) கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று (07) யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.