பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அந்த பிரதேச சபையின் உறுப்பினருக்கும் முறைப்பாட்டாளராக பெண்ணுக்கும் இடையில், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அண்மையில் உள்ள காணியொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, தூசன வார்த்தைகளால் ஏசிவிட்டு, சாரத்தை தூக்கி காண்பித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, பிரதேச சபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், அந்த நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.