மணமேடையில் வைத்து மணமகன் முத்தம் கொடுத்ததால் மணப் பெண் திருமணத்தை நிறுதிய விநோத சம்பவம் உத்திர பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த திருமணத்தில் 300க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணமேடையில் வைத்து, எதிர்பாராத விதமாக அனைவரது முன்னிலையிலும் ,மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மணப்பெண், குறித்த திருமணத்தை நிறுத்தியுள்ளதோடு இது குறித்து பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில் ” தனது நண்பர்களிடம் பந்தயம் கட்டி, அதில் வெற்றிப் பெறுவதற்காக மணமகன் தன்னை முத்தமிட்டதாகவும், இதனால் மணமகனின் நடத்தையில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் ” தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”தன்னைத் தகாத முறையில் அவர் தொட்டதாகவும், முதலில் அதைத் தான் பெரிது படுத்தவில்லை எனவும், பின்னர் அவர் முத்தம் கொடுத்தபோது, என்னை அவர் அவமதிப்பது போல உணர்ந்ததாகவும், எனது சுய மரியாதை குறித்து அவர் சற்றும் யோசிக்காமல், விருந்தாளிகள் முன்னிலையில் தன்னிடம் தகாத நோக்கத்துடன் நடந்துகொண்டார்” என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் அப் பெண்ணை சமாதானம் செய்ய முயற்சி செய்த போது அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் “திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்துவிட்ட பின்னரே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் இருவரும் சற்று அமைதியடைந்த பின்னர் அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கவேண்டும்”எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply