சிங்கப்பூர் நாட்டில் தான் வாங்கிய லாட்டரியை குப்பையில் வீசியிருக்கிறார் ஊழியர் ஒருவர். அந்த டிக்கெட்டிற்கு ஜாக்பாட் அடித்ததாக அதிகாரிகள் போன் செய்ததால் அந்நபர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

சிங்கப்பூரில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? ஆனால் இப்படியும் ஜாக்பாட் ஒருவருக்கு அடிக்குமா? என கேட்க வைத்திருக்கிறார் சிங்கப்பூரை சேர்ந்த ஊழியர் ஒருவர்.

சிங்கப்பூரில் பல லாட்டரி டிக்கெட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இவற்றின் குலுக்கலும் ஒவ்வொரு விதமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சிங்கப்பூர் ஸ்வீப் எனப்படும் லாட்டரியை பொறுத்தவரையில் மாதத்திற்கு ஒருமுறை குலுக்கல் நடைபெறுகிறது.

இந்த குலுக்கலில் ஜாக்பாட்டாக 23 லட்சம் டாலர்கள் அளிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய்.

இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த ஊழியர் ஒருவர் இந்த சிங்கப்பூர் ஸ்வீப் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

அதன்பிறகு தனது அன்றாட வேலைகளில் அவர் மூழ்கிவிட்டார். பின்னர் குலுக்களின் போதும் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை.

பின்னர் அடுத்த சில நாட்களில் அவருக்கு லாட்டரி நிறுவன அதிகாரிகள் போன் செய்து அவர் வாங்கியிருந்த லாட்டரி டிக்கெட்டிற்கு 23 லட்சம் டாலர் பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தாலும் கொஞ்ச நேரத்தில் பரபரப்பாகிவிட்டார். காரணம் அவர் தனது டிக்கெட்டை குப்பையில் வீசியதே.

பின்னர் தனது வீடு முழுவதும் அவர் தேடியதில் இறுதியாக குப்பைத் தொட்டியில் தேடும்போது ஜாக்பாட் டிக்கெட்டை கண்டுபிடித்திருக்கிறார் அவர்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,”எனக்கு வாழ்வில் எப்போதுமே ஜாக்பாட் அடித்ததில்லை. அதனாலேயே நம்பிக்கை இழந்து அந்த டிக்கெட்டை குப்பையில் வீசிவிட்டேன்.

ஆனால், அதிகாரிகள் எனக்கு போன் செய்து விபரத்தை கூறியதும் நான் அதிர்ந்துவிட்டேன். நல்லவேளையாக அந்த அதிர்ஷ்ட டிக்கெட் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply