உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சில மாணவிகளை நவம்பர் 23ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று உள்ளார்.
இரவு தங்குவதற்காக ஓட்டலில் இரண்டு அறைகள் எடுத்து உள்ளார். ஒரு அறையில் சில மாணவிகளை தங்க வைத்து உள்ளார்.
மற்றொரு அறையில் அவரும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியும் தங்கியுள்ளனர்.
அவர் சிறுமிக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார். சிறுமி அதை சாப்பிட்ட பி செய்து உள்ளார்.
காலையில் எழுந்ததும் இதை யாரிடமாவது சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
மேலும் கொலை செய்துவிடுவதாகவும் எச்சரித்துள்ளார். அதன் பிறகு அனைத்து மாணவிகளும் நவம்பர் 24 அன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி உள்ளார் இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.