இந்தியா வியாழன் அன்று அக்னி – 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ஒடிசா கடற்கரை அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.சோதனைக்கு முன்பு வங்களா விரிகுடா பகுதியில் பறக்க இந்தியா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதலை அடுத்து இந்த இரவு நேர சோதனையை இந்தியா மேற்கொண்டுள்ளது.இந்த அக்னி -5 ஏவுகணையை கொண்டு மொத்த ஆசியப் பகுதிகளையும் ( சீனா உட்பட ) இந்தியாவால் தாக்க இயலும்.

சீனாவின் தூர வடக்குபகுதியும் கூட அக்னியின் தாக்கும் வரம்பிற்குள் வருகிறது.1.5 டன் அணுவெடிபொருளை சுமந்து 5500கிமீ வரை சென்று மிகத்துல்லியமாக தாக்க கூடியது இந்த அக்னி-5 ஏவுகணை.

இதற்கு முன்பும் அக்னி -5 ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையை கண்காணிக்க சீனா தனது உளவுக் கப்பலையும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply