மரண வீடொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பெறுமதியான சில மலர்வளையங்கள், ஊர்வலமாக புதைக்குழிக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதும், புதைக்குழிக்கு கொண்டுச் செல்லப்படாது மலர்சாலைகளுக்கே மீண்டும் விற்பனைச் செய்யப்பட்ட சம்பவமொன்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா நகரில் பிரபல்யமான வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மரண வீடொன்று இடம்பெற்றுள்ளது. அதற்கு உறவினர்கள், வர்த்தகர்கள் என பலரும் பெறுமதியான மலர்வ​ளையங்களை வாங்கி வைத்து, அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

சமய வைபவங்கள் நிறைவடைந்ததும், சவக்குழியை நோக்கி, பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டது. அந்த ​ஊர்வலத்துக்கு முன்பாக, மலர்வளையங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதற்கு பெரும் போராட்டமே இடம்பெற்றது. மலர்வளைங்களை எடுத்துச் செல்வதில் பலரும் முண்டியடித்து கொண்டனர். கிடைத்தவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

சடலம் புதைக்கப்பட்டதன் பின்னர் அந்த புதைக்குழியை சுற்றி மலர்வளையங்கள் வைக்கப்பட்டன. எனினும், பல மலர்வளையங்கள் மாயமாகி இருந்தமை அப்​போதுதான் கண்டறியப்பட்டது.

அவ்வாறு மலர்வளையங்களை எடுத்துச் சென்றவர்களில் பலர் மாயமாகியிருந்தனர்.

பின்னர் தேடிபார்த்தபோது, மலர்வளையங்கள் பல, மலர்ச்சாலைகளுக்கு மீண்டும் விற்பனைச் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

போதைப்பொருள்களுக்கு அடிமையான சிலர், மலர் வளையங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து இடைநடுவில் மாயமாகிவிட்டனர் என்றும். அவ்வாறானவர்களே மலர்வளையங்களை மீண்டும் மலர்ச்சாலைகளுக்கு விற்பனைச் செய்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply