இங்கிலாந்து யுவதியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்ட மீனவர் கிரிந்த பொலிஸாரால் கைது!

இங்கிலாந்தை சேர்ந்த யுவதி ஒருவரை  வீதியில் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து  முத்தம் கெடுத்தார் எனக்   கூறப்படும் 38 வயதான மீனவர் ஒருவர் கிரிந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது பெற்றோருடன் கிரிந்தவுக்கு தங்குமிடம் பெற சென்றுள்ளார்.

அந்தந்த தங்குமிடத்துக்கு  முன்னால் உள்ள  வீதியின் அருகில்  தான் இருந்தபோது, அந்தப் பாதையால்  பயணித்த நபர் ஒருவர் தன்னைக் கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக  குறித்த யுவதி  முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் குறித்த நபரிடம் இருந்த கைத்தொலைபேசியை கைப்பற்றிய யுவதி அதனை கிரிந்த பொலிஸாரிடம் ஒப்படைத்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் விசாரணைகளை மேற்கொண்ட கிரிந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, மாகம பிரதேசத்தில் வசிக்கும் மீனவர் என கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Share.
Leave A Reply