ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Friday, June 2
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Breaking News

    மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01

    AdminBy AdminApril 25, 2023No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்],

    கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை.

    அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists from different tribes / ethnic groups into one race] இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை.

    இந்த கால பகுதியில் இந்தியாவில் புத்த மதத்தின் செல்வாக்கு சரிந்து வருவதையும் வட இந்தியாவில் வைதீக மதமும், தென் இந்தியாவில் சிவனை முழு முதற் கடவுளாக வழிபாடும் சைவ மதமும் மீண்டும் வலுப்பெற்று வருவதையும் கேள்விப் பட்ட புத்த மத துறவிகள்,

    புத்த மதத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, அதற்கு காவலனாக சிங்கள இனத்தை உருவாக்கினார்கள் என்பதே உண்மை.

    எனவே விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும், அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும், மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி குடிகளின் [நாகர், இயக்கர்] இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக பின் உருவாக்கப்பட்டது என்பது மிக மிக தெளிவு.

    நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    அதாவது ஆரியர்கள், திராவிடர்கள் [தமிழர்கள்], என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உருவாகினார்கள்.

    என்றாலும் சிங்கள இனமாக உருவாக்கப்பட்ட, புத்த மதத்தை பின்பற்றுபவர்களை தவிர, அங்கு இன்னும் சிவனை வழிபடுபவர்களும், வைதீகத்தை பின்பற்று பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

    அவர்கள் புது மொழியான சிங்களத்தை ஏற்காது, தமது பண்டைய மொழியையே, அநேகமாக தமிழையே பேசினார்கள்.

    இலங்கையில் தமிழர் என்ற வார்த்தையை குறிக்கும் கல்வெட்டுகள், பிராகிருதம் அல்லது பாளி மொழியில், கி மு 6ம் அல்லது கி மு 5ம் நூற்றாண்டில் இருந்து ‘Damela, Dameda, Dhamila and Damila’ என பல அடையாளம் இன்று காணப் பட்டுள்ளது [Epigraphic evidence of an ethnicity termed as such is found in ancient Sri Lanka where a number of inscriptions have come to light datable from the 6th to the 5th century BCE mentioning Damela or Dameda persons] அதாவது சிங்களம் என்ற ஒரு இனம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் தமிழர் என்ற வார்த்தை இலங்கை கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

    எனவே மூத்த சிவாவும் அவன் குடி மக்களும் பேசிய மொழி கட்டாயம் சிங்களம் அல்ல. அது தமிழாகவோ அல்லது ஒரு தமிழ் கலந்த மொழியாகவோ இருக்கலாம் என்பது தெளிவு, அது மட்டும் அல்ல அவன் பெயரிலேயே தமிழ் சொல் ‘மூத்த’ [‘elder’] இருப்பது கவனிக்கத் தக்கது.

     

    எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

    அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன், விஜயனுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றான் என்கிறது மகாவம்சம். எனவே பண்டு வாச தேவனின் தாய் ஒரு தமிழிச்சி என தெரியவருகிறது.

    அவனின் மகள் வழிப் பேரனான, பண்டுகாபயனின் [பண்டு அபயனின்] மகன் மூத்தசிவா [Mutasiva meaning: Elder siva] ஆகும். மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள்.

    மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன.

    தொடரும்….

    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

    Post Views: 83

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 05

    June 1, 2023

    முன்னணி ஜேர்மன் நவ-நாஜிக்களுடன் உறவுகளைக் கொண்ட ரஷ்ய பாசிஸ்ட்டுக்கள், உக்ரேன் ஆதரவுடன் ரஷ்யாவில் தாக்குதலை நடத்தினர்

    May 30, 2023

    மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 04

    May 29, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar   May »
    Advertisement
    Latest News

    மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 05

    June 1, 2023

    விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்

    June 1, 2023

    திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் ‘மதுபாட்டில்’ கொடுத்த மணமகள் வீட்டார்

    June 1, 2023

    அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

    June 1, 2023

    இலங்கை ரூபாய்க்கு விரைவில் கஷ்டகாலம் ஆய்வாளர்கள் கணிப்பு?

    June 1, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 05
    • விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்
    • திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் ‘மதுபாட்டில்’ கொடுத்த மணமகள் வீட்டார்
    • அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version