புத்தளம் மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தனியார் காணியில் புதையல் எடுப்பதற்காக சிறுமியொருவர் பலி கொடுக்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த காணியில் குழியொன்று வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதோடு குழியில் பெண் குழந்தையுடையது என சந்தேகிக்கக்கூடிய ஆடைகள் காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

புத்தளம், மதுரங்குளி கின்னவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை மதுரங்குளி பொலிஸார் அந்த இடத்தில் இருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

அண்மைய நாட்களில் இந்த காணிக்கு அருகில் காணப்பட்ட வயோதிபப் பெண்ணொருவரும் சிறுமியொருவரும் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கிகின்றனர்.

இதனிடையே புதையல் தோண்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழியில் நிரம்பியிருந்த தண்ணீரை அகற்றி சிறுமி குறித்த தகவல்களை தேடுவதற்கும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Share.
Leave A Reply