யாழ் – சென்னை விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்!

இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது.

இதன் மூலம் 10,500இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் 100ஆவது விமானச் சேவை இன்று (07) முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா இடர்காலத்தில் இடைநிறுத்தத்திற்குப் பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.

இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழி பயணிகள் போக்குவரத்து டிசம்பர் 12 இல் இருந்து இன்றுவரை மொத்தம் 10,500இற்கும் அதிகமாக உள்ளது.

இந்தியத் தூதரகத்தின் அறிக்கையில் இச்செயற்பாடானது இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என கூறியுள்ளதோடு அதிகரித்த இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தூண்டி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரத்தில் 4 தடவை இடம்பெற்றுவரும் சேவையை 7 தடவையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply