ஐம்பத்தைந்து வயதான காதலியிடம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் காதலன் பல வருடங்களாக, குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பை கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவரிடமிருந்து தங்கப் பொருட்கள் எதனையும் மீட்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.