யாழ். கொழும்புத்துறையில் முச்சக்கர வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பாடசாலை மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply