எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள், ஆகையால் என் மகளை சிறிய பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தாயொருவர், தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வந்த பொலிஸார், அப்பெண்ணை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர். எனினும், தாய் தனது வயிற்றில் பிள்ளையை சுமக்க முடியும் என்றால், தாயால் ஏன்? தோளில் சுமக்க முடியாது என்றும் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தது.
எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக்கொண்டால் போதும் என்றும் மன்றாடினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணங்காட்டி எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றார்.