கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ஆம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் பெருந்தொகை பரிசை பெற்றுள்ளார்.
அவருக்கு 35 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது.
தமக்கு வாய்ப்பு வரும் என்று தாம் எப்போதும் நம்பியதாக பரிசு கிடைத்தன் பின்னர் டொராண்டோவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
சில்லறை வணிகத் தொழிலாளியான ஜெயசிங்க, தமது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டை கொள்வனவு செய்யவும், தனது மகளின் கல்விக்கு செலவிடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.