பயணிகள் பயணம் செய்ய இருந்த நிலையில் திடீர் நிறுத்தம் அலறிஅடித்து பயணிகள் கீழே இறங்கியதில் காயம் ஏற்பட்டது
ஹாங் காங் நாட்டைச் சேர்ந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான CX880 என்ற விமானம் ஹாங் காங்கில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு புறப்பட இருந்தது.
இந்த விமானத்தில் 293 பயணிகள், விமானிகள் உள்பட 17 பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்பட தயாராகும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
இதனால் விமானம் புறப்படுவதை நிறுத்தினார். புறப்பட்ட இருந்த விமானம் திடீர் என நிறுத்தப்பட்டதால், பயந்து போன பயணிகள் பதறியடித்த அவசர அவசரமாக எமர்ஜென்சி கதவுகள் மூலம் வெளியேறினர்.
இதனால் 11 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக விமானத்தின் ஒரு டயர் வெடித்ததுதான் காரணம் என தகவல் தெரிவிக்கின்றன.