வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 14ஆவது வருட முத்தேர் பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்றது.
ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று, 16 தினங்கள் இடம்பெற்று வரும் மஹோற்சவத்தில் இன்றைய இரத பவனியை தொடர்ந்து, ஜூலை 3ஆம் திகதி தீர்த்தோற்சவமும், 4ஆம் திகதி தெப்போற்சவமும் இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் நிறைவடையும்.
இன்றைய இரத பவனியின்போது நயினாதீவு நாகபூசணி அம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூர்த்திகள் இரதத்தில் எழுந்தருளி பக்தர்கள் சூழ வலம் வந்தமை முக்கிய அம்சமாகும்.
இரத பவனியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்ததோடு, பலர் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.