கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி இலங்கையின் கடவுச்சீட்டு 95 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

Henley and Partners Index 2023 இத்தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Henley and Partners Index சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றது.

இது உலகின் அனைத்து கடவுச்சீட்டுக்களின் அசல் தரவரிசையாகும், அவற்றினை வைத்திருப்பவர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை பொறுத்து இத்தரப்படுத்தல் வெளியிடப்படுகின்து.

சமீபத்திய சுட்டெண்ணின் படி, 41 நாடுகள் இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணம் அல்லது விசா-ஆன்-அரைவல் ஆகியவற்றை வழங்கியுள்ள நிலையில், இலங்கை தரவரிசையில் முன்னேறியுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு 2022 இல் 103 ஆவது இடத்திலும் 2021 இல் 107 ஆவது இடத்திலும் இருந்தது.

சிங்கப்பூர், மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, லாவோஸ், தஜிகிஸ்தான், பஹாமாஸ், டொமினிக்கா, மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வீசா இன்றியோ அல்லது வருகைக்கு ஏற்ப வீசா மூலமாகவோ நுழைய முடியும்.

இதவேளை இந்திய கடவுச்சீட்டு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது மற்றும் இப்போது சமீபத்திய குறியீட்டில் 80 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் இது 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது.

இதேவேளை, இலங்கையின் அண்டை நாடுகளான மாலைதீவு தரவரிசையில் 57ஆவது இடத்திலும், பூட்டான் 84ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 96ஆவது இடத்திலும், நேபாளம் 98ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 100ஆவது இடத்திலும் உள்ளன.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேகமான மற்றும் அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில், சமீபத்திய தரவரிசையின்படி, ஜப்பான் குறியீட்டில் ஐந்தாண்டுகளில் முதல் முறையாக 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சிங்கப்பூர் இப்போது அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக உள்ளது, அதன் குடிமக்கள் உலகெங்கிலும் உள்ள 227 பயண இடங்களில் 192 பயண இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் அனைத்தும் 190 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளன,

மேலும் ஜப்பானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஏனைய ஆறு நாடுகளான ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிவற்றுடன் இணைந்துள்ளனர். முன் விசா இல்லாமல் 189 இடங்களுக்கு அணுகலாம்.

Share.
Leave A Reply