இலங்கை ரூபாவானது மூன்று வாரங்களுக்குள் ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி, மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக டொலருக்கான கேள்வி உயர்வடைந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் டொலரின் பெறுமதி 355 ரூபா வரை உயர்வடையும் என Hong Kong-இல் அமைந்துள்ள Natixis நிறுவனத்தை மேற்கோள்காட்டி Bloomberg இதனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 323.69 ஆக அதிகரித்து விற்பனை விலை ரூபா 337.17 ஆக உள்ளது.

Share.
Leave A Reply