கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை வெள்ளிக்கிழமை (28) வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த ஹர்த்தாலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பல்கலைக்கழக ஆசியர் சங்கம் , தமிழரசு கட்சி , உள்ளிட்ட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.