இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (ஜூலை 30) காலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று அருகில் இருந்த சுவரில் மோதி வீதியை விட்டு விலகி செங்குத்தான பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி நித்திரைக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த 10 பேர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக அடிக்கடி பஸ் விபத்துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது