தன்னுடைய மனைவி, அவருடைய கள்ளக்காதலுடன் ஓட்டோவில் இருப்பதைக் கண்ட கணவன், அந்த ஓட்டோவை தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹொரனை ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஓட்டோவுக்கு தீ வைத்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய மனைவி, ஹொரனை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்றார்.

இன்று(02) கடமைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து காலை வெளியேறியுள்ளார்.

எனினும், தன்னுடைய மனைவி மற்றுமொருவருடன் ஓட்டோவில் இருப்பதாக கணவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், அந்த ஓட்டோவை நோக்கி கணவன் ஓடியுள்ளார்.

இதனை கண்ட அந்த காதல் ஜோடி, ஓட்டோவை அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டது.

ஆத்திரமடைந்த கணவன், ஓட்டோவுக்கு தீவைத்து கொளுத்தியுள்ளார். இந்த தீயால் அந்த ஓட்டோ முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

Share.
Leave A Reply