அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன.

கடந்த யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி வடகிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது இரத்த உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியை தொடர்ந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலமையில் இன்று (09) காலை இடம் பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இடம் பெற்றதுடன் பிரதான வீதி வழியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு திருக்கோவில் மணிகூண்டு கோபுரத்தினை வந்தடைத்ததுடன் வட, கிழக்கில் இராணுவம், புலனாய்வாளர்கள் உடன் வெளியேற்றப்பட்டு தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

Share.
Leave A Reply