புத்தளம் – சிலாபம் பிரதேசத்தில் அம்மன் கோயில் வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 75 வயதுடைய 04 அடி உயரம் 06 அங்குலம் கொண்ட நீல நிற உடையணிந்த பெண் ஆவார்.
குறித்த விபத்தானது குருநாகல் பிரதேசத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் பெண் ஆகியோர் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவரது சடலம் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.