டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 3 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

வெளியாகி உள்ள சட்டசபை தேர்தல் முடிவில்.. மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

சத்தீஸ்கரில் பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.மிசோராமில் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்படவில்லை. நாளை நடக்க உள்ளது.

மத்திய பிரதேசத்தில்., பாஜக 164 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

அதேபோல் ராஜஸ்தானில் பாஜக 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

200 இடங்களில் மெஜாரிட்டி பெற 101 இடங்கள் போதும். சத்தீஸ்கரில் ., பாஜக 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

மெஜாரிட்டி பெற அங்கே 90 இடங்களில் 46 இடங்கள் போதும்.

3 மாநிலங்களில் வெற்றி: இதில் 3 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

3 மாநிலங்களில் வென்றதும் பாஜக முக்கியமான ஒரு முடிவை எடுக்க போவதாக செய்திகள் வருகின்றன

முதல்வர் வேட்பாளர்கள்: இதில் 3 மாநிலங்களிலும் முதல்வராக டெல்லி பாஜக மேலிடம் யாரை தேர்வு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநிலங்களில் பாஜகவின் முகமாக இருக்கும் நபர்களை ஒதுக்கிவிட்டு புதிய முகங்களை பாஜக கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

மாநில அளவில் பாஜகவிற்கு என்று முகங்கள் உருவாவதை மோடியோ, டெல்லி மேலிடமோ விரும்பியதே இல்லை. உதாரணமாக கர்நாடாகாவில் பாஜகவின் முகமாக எடியூரப்பா இருந்தார்.

அவரை ஒதுக்கிவிட்டு பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார் . அந்த வகையில்தான் தற்போது ராஜஸ்தான் தேர்தலில் வென்ற நிலையில் அம்மாநில முகமான வசுந்தரா ராஜேவை டெல்லி மேலிடம் ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக ராஜஸ்தானில் புதிய முகமான பாஜக லோக்சபா எம்.பி., பாலக் நாத் முதல்வர் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இருந்து பாஜக லோக்சபா எம்.பி., பாலக் நாத், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் இம்ரான் கானை எதிர்த்து போட்டியிட்டார்.

இதில் பாலக் நாத் முன்னிலையில் உள்ள நிலையில் முதல்வராக அவரை பாஜக தேர்வு செய்யும் என்கிறார்கள். சாமியாரான இவர் ராஜஸ்தானின் யோகி ஆதித்யநாத் என்று அழைக்கப்படுகிறார்.

மத்திய பிரதேசம்: இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்திலும் சிவராஜ் சிங் சவுகான் மாநில முகமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.

அவருக்கு பதிலாக புதிய நபர்.. 1 வருடத்திற்கு பின் முதல்வராகலாம் என்கிறார்கள். அதன்படி லோக்சபா தேர்தல் வரை சிவராஜ் சிங் சவுகானை வைத்துக்கொண்டு அதன்பின் அவரை ஓரம்கட்ட மோடி பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கர்: இது போக சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராமன் சிங், அருண் சவ் துர்க். எம்பி விஜய் பாகேல் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஓபி சவுத்ரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் அங்கேயும் பெரிய தலைவர்கள் முதல்வராக்கப்படாமல் புதிய முகம் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள்

 

Share.
Leave A Reply