தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1334 குடும்பங்களைச் சேர்ந்த 4254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நேற்று சனிக்கிழமை (16) மாலை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் 941 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேரும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 9320 பேரும், மண்முனைபற்று பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காத்தான்குடி 2ஆம் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன், வாகரையில் 2 வீடுகளும் காத்தான்குடியில் ஒரு வீடும், ஏறாவூர் பற்றில் 7 வீடுகளுமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply