கிளிநொச்சி – கரியாலை நாகபடுவான் குளத்திலிருந்து அதிக நீர் வெளியேறி வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் ஏற்பட்ட மழைவீழ்ச்சி காரணமாக குறித்த குளம் வான் பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் குளத்தை பாதுகாப்பதற்காக, குளத்தின் வால்க் கட்டு படுதி வெட்டப்பட்டும், துருசும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் அவதானமாக இருப்பதுடன், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத குளம் என்பதாலும், அளவுக்கு அதிகமான நீர் வருகை காணப்படுவதாலும் குறித்த குளத்தின் கீழ் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.