தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.
மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர்.
இதில் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது ஆளாக கில்மிஷா தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
பல கட்டங்களில், பல சுற்றுகளில் இந்த இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்ததுடன், மக்களின் அமோக ஆதரவையும் பெற்றிருந்தனர்.
அந்த வகையில், இன்றைய தினம் இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.
ஆறு பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தனர்.
அவர்களில் கில்மிஷா முதலிடம் பிடித்ததுடன், சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு கில்மிஷாவுக்கு 10 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.