நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது கடந்த 24 மணித்தியாலங்களில் 2,121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 கிலோ 232 கிராம் ஹெரோயின், 178 கிலோ கஞ்சா, 769 கிராம் ஐஸ் போதைப்பொருள், 35 கிலோ சாம்பல், 626 கிராம் மாவா, 30,550 கஞ்சா செடிகள் மற்றும் 3,489 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 2,121 சந்தேக நபர்களில், 12 சந்தேக நபர்கள் தடுப்பு உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள், அவர்களில் 116 பேர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் IRC பட்டியலில் உள்ளனர்.

மேலும், 5 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 133 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த விசேட நாடளாவிய நடவடிக்கை. நாடளாவிய ரீதியில் 45 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய இந்த முயற்சியானது பொலிஸ், விசேட அதிரடிப்படை (STF) மற்றும் ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளை உள்ளடக்கியுள்ளது.

ஒன்பது மாகாணங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இந்த விரிவான நடவடிக்கையை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply