தங்குமிடமொன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்ட மத சபையினால் நடத்தப்படும் 63 வயதான பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடுதி பதிவு செய்யப்படாதது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் 2020 முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

5 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸ் ஏற்பாடு செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply