இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதனிடையே டிசம்பர் முதலாம் திகதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் ஒரு இலட்சத்து 750 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்து 597 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 14 ஆயிரத்து 156 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10 ஆயிரத்து 281 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

ஜேர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. (a

Share.
Leave A Reply