14 வயதான பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் நவகத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹ்ரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

நவகத்தேகம – வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share.
Leave A Reply