களுத்துறை – மில்லனிய பிரதேசத்தில் யுவதி ஒருவருக்காக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகியுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளன.
இவர்கள் மில்லனிய, பெல்லன்துடாவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றிற்கு முன்பதாக வாள் மற்றும் மன்னா போன்ற ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.