கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி பூநகரி நான்காம் கட்டை நெடுங்குளம் பகுதியில் வியாழக்கிழமை (21) வீட்டுக்கு அருகிலிருந்த பாதுகாப்பற்ற குழியில் விழுந்தே குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் புணரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.