குழந்தையைப் பெற்றெடுத்து சிறிது நேரத்திலேயே தாய் உயிரிழந்துள்ளதாக வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாய் கடந்த 18 ஆம் திகதி பிரசவத்திற்காக வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் பின்னர் தாயின் மரணத்தையடுத்தது சில நிமிடங்களில் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உயிரிழந்த தாயின் முதல் பிரசவம் இதுவெனவும் தாய்க்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாய் மற்றும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கலேலிய இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.