வவுனியா – பாவற்குளத்தில் இளம்பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (21) மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் வவுனியா – நாகர் இலுப்பைக்குளத்தினை சேர்ந்த ஜன்சிகா (வயது 17) என்ற யுவதியே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.