கல்முனையில் வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டியணைக்க முயற்சிசெய்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் மீதே 49 வயதான குறித்த நபர் அத்துமீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண் கல்முனைப் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.