“சென்னை, பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறறது. இந்நிகழ்ச்சியில், சுமார் 2200 பேருக்கு புத்தாடை, அரிசி, மளிகைப் பொருட்கள், கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பெரு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, தாயகம் கவி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீங்கம் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. முஸ்லீம் என்று அழைத்தால் நான் முஸ்லீம். எனக்கென்று எந்தவித ஜாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்” என்றார்.”,