கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply