பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விடுதி ஒன்றிற்கு பெண் ஒருவருடன் வந்த நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவராவார்.
இவர் கடந்த 25 ஆம் திகதி பெண் ஒருவருடன் பொரலஸ்கமுவயிலுள்ள விடுதி ஒன்றிற்கு வந்த நிலையில் சில மணி நேரங்கள் கடந்த பின்னர் குறித்த பெண் சத்தமிட்டு அறையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து, விடுதி பணியாளர்கள் அறைக்குள் வந்து பார்த்த போது குறித்த நபர் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
பின்னர் விடுதி பணியாளர்கள் இவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் இவர் ஏற்கனமே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் குறித்த பெண் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.