வீடியோவில், இரண்டு பொலிஸார் சந்தேக நபரை தரையில் பிடித்து கயிற்றால் கட்டுவதை காணலாம். ஒரு அதிகாரி சந்தேக நபரின் மீது அமர்ந்துள்ளார், மற்றவர் சந்தேக நபரின் கால்களைக் கட்டுகிறார்.
டிசம்பர் 26 ஆம் திகதி குருநாகல் டோரடியாவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெளிவுபடுத்தினார். போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் திருட்டு சம்பங்களுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சந்தேகநபரை கைது செய்ததாக அவர் கூறினார்.
“வீடியோவில் உள்ள நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர், போதைப்பொருள் விற்பனை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு தினசரி ஊதியம் பெறுகிறார். கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரின் வசம் 2 கிராம் ஹெராயின் இருந்தது. சந்தேக நபரைக் கட்டுப்படுத்தவே அதிகாரிகள் முயன்றனரே தவிர, அவரைத் தாக்க முற்படவில்லை” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.