“மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் நேற்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி சேதமான இந்த விமானத்தை அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியில் உள்ள பிப்ரகோதி என்கிற மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது.


இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டது.

மேம்பாலம் அடியில் விமானம் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல், கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் கொண்டு செல்லப்பட்டபோது ஆந்திரா மாநிலத்தில் உள்ள பபாட்லா மாவட்டத்தில் மேம்பாலம் அடியில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply