பண்டாரவளை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாய் மற்றும் மகனுடன் பாடசாலை மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 38 வயதுடைய பெண்ணும் 16 வயதுடைய அவரது மகனுமாவர்.
குறித்த பெண்ணின் கணவர், வீட்டில் உள்ள பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் தொலைபேசியை சோதனையிட்ட போது இவர் தனது மகன் மற்றும் மகனின் பாடசாலை நண்பர்கள் இருவருடன் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியிருந்துள்ளன.
இதனையடுத்து மகனின் பாடசாலை நண்பர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த பெண் தொலைபேசியில் அறிமுகமான மாரவில பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
அந்நபர் மூலமாக பெண் மற்றும் அவரது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.