மஹியங்கனை இருபதாம் கட்டையிலிருந்து ரோஹண சந்திக்கு செல்லும் வீதியில் உள்ள பாலம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை முற்றாக உடைந்துள்ளதாக மஹியங்கனை பிரதேச செயலாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்தார்.
பலத்த மழை மற்றும் மஹியங்கனை தம்பராவ ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் பாலம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹியங்கனை ரொட்டலவெலக்கு அருகில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நீர்ப்பாசனப் பிரிவு மகாவலி அதிகாரசபை பிரதேச செயலகத்துடன் இணைந்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மஹியங்கனை பிரதேச செயலாளர் சஞ்சய் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.