மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கடும் மழை காரணமாக இம்மாவட்டத்தின் பல பிர்தேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.குறிப்பிட் 24 மணி நேரத்தில் இம்மாவட்டத்தில் 169.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் 3 மணி முதல் இன்று 8.30 மணி வரையான காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் இடைவிடாத கடும் மழை பெய்தது.இதனால் பெரும் பாலான வீடுகளுள் வெள்ளம் புகுந்துள்ளது.
புதிய காத்தான்குடி ஆரையம்பதி களுவாஞ்சிக்குடி நாவற்குடா கொக்கட்டிச்சோலை உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.