வடமராட்சி கிழக்கு – நித்தியவெட்டை பகுதியிலுள்ள குறுக்கு வீதியொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (02) காலை மீட்கப்பட்டுள்ளது.
நித்தியவெட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (01) மாலை வீட்டிலிருந்து வௌியேறிய குறித்த இளைஞர் நேற்றிரவு வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுல் நடவடிக்கையில், ஒழுங்கையொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னரே, குறித்த மரணம் கொலையா என்பது குறித்து தெரியவரும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியதன் பின், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.