மனைவியின் மூத்த சகோதரனின் தலையில் கோடரியால் தாக்கி கொலைசெய்துவிட்டு கொலைக்குப் பயன்படுத்திய கோடரியுடன் சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக ஹித்தோகம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பொலிஸில் சரணடைந்தவர் ஹித்தோகம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவராவார்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவராவார்.
இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் உயிரிழந்தவரது சகோதரியின் கணவரான நிலையில் அவரது மனைவி மத்திய கிழக்கு பகுதியில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சந்தேக நபரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதையடுத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபர் உயிரிழந்தவரது தலையில் கோடரியால் தாக்கியுள்ளார்.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹித்தோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.