ருவான் பிரசன்ன குணரட்ண என்ற போதகரின் போதனைக்கு உட்பட்டவர்கள் குறித்து குடும்பத்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

குணரட்ண சமீபத்தில் ஹோமகமவில் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

நாட்டின் பல பகுதிகளில் மதபோதனையில் ஈடுபட்ட இவர் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களின் பின்னர் இவரது மனைவி மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

இதன் பின்னர் அவருடன் நெருக்கமாக பழகிய இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.போதகரின் இறுதிகிரியைகளில் கலந்துகொண்ட பின்னர் இவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

போதகரின் போதனைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்டவர்கள் தங்கள் உயிர்களைமாய்த்துக்கொண்டுள்ளனர் எனதெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் இந்த போதனைகளின் போது அவர் தற்கொலையை நியாயப்படுத்தினார் அடுத்த ஆன்மாவை பெறுவதற்கான இலகுவான வழி இது என அவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply