தனது கள்ளக் காதலியின் மகளை பல வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பூகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவர் தனது கள்ளக்காதலியின் 17 வயது மகளை பல வருட காலங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதி இது தொடர்பில் கிரிந்திவெல பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply