அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று புதன்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் கடந்த 26ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதலுடன் மோதியது. இதன்போது அவர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.

இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share.
Leave A Reply